பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்தப் படம் முதலில் அஜித்தால் கைவிடப்பட்ட படமாம்.! இத போய் மிஸ் பண்ணிட்டாரே.!
நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவருடைய நடிப்பின் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் தன்னுடைய 63 வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். சில சமயம் சில பிரபல நடிகர்களால் நடித்து கைவிடப்பட்ட ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டடிக்கும்.
அப்படி ஒரு சம்பவம் நடிகர் அஜித்குமாருக்கும் நடந்துள்ளது. வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்த இந்த திரைப்படத்தில் முதலில் அஜித்குமார் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. அதோடு இந்த திரைப்படத்திற்கு முதலில் ஏறுமுகம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த திரைப்படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும், இதன் பிறகு ஒரு சில காரணங்களால் அந்த திரைப்படத்திலிருந்து அஜித்குமார் விலகிக் கொண்டார்.
அதன் பின் அதே கதையில் விக்ரமை கதாநாயகனாக வைத்து திரைப்படத்தின் தலைப்பை ஜெமினி என மாற்றி இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார் சரண்.