பிரபலத்தின் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ள அஜித்! நீண்ட வருடங்களுக்கு பிறகு வைரலாகும் அரிய புகைப்படம்!!



Ajith visit cine artist sridevi srithar house

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவர்.

இந்நிலையில் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் பிரபலம் ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ள பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, 2005ம் ஆண்டு நடிகர் அஜித் சினிமா பிரபலம் ஸ்ரீதேவி ஸ்ரீதர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுள்ளார். அப்பொழுது எடுத்த அரிய புகைப்படங்களை ஸ்ரீதேவி ஸ்ரீதர் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.