தனிஒருவன் படத்தில் நடிக்க அஜித்தைத் தான் யோசித்தோம்..! இயக்குனர் வெளியிட்ட டாப் சீக்ரெட்!



ajith-was-the-first-choice-of-thanioruvan-sidharth-char

இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது தனிஒருவன் திரைப்படம். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை தற்போது கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் மோகன்ராஜா.

படத்தில் ஜெயம் ரவிக்கு மிரட்டல், மாடர்ன் வில்லனாக நடித்திருந்தார் அரவிந்த்சாமி. சித்தார்த் அபிமன்யூ என்ற அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, பாராட்டுகளையும் பெற்றது. மேலும், அரவிந்த்சாமிக்கு இந்த படம் சரியான ரீஎண்ட்ரியாக அமைந்தது.

Ajith

இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக, அரவிந்த்சாமிக்கு பதிலாக தல அஜித்தைத்தான் நடிக்கவைக்க யோசித்ததாக இயக்குனர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார். மேலும்,  கன்னட நடிகர் சுதீப், நடிகர் ராணா ஆகியோரது பெயர்களும் கதை விவாதத்தின் போது யோசித்ததாக கூறியுள்ளார்.

ஒருவேளை அஜித் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார் மோகன்ராஜா.