#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அக்ஷரா ஹாசனின் நடிப்பில் "அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு"! பட டீசரை வெளியிட்டு வாழ்த்திய ஸ்ருதி!
முன்னணி நடிகரான கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன்.இவர் தமிழில் அஜீத் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம்கொண்டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அதனைத் தொடர்ந்து அக்ஷரா ஹாசன் நவீன் இயக்கத்தில் உருவாகிவரும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
பின்னர் தற்போது ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் டிரண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என பெயரிடப்பட்டுள்ளது.
The teaser of #AMNP is here and it's super intriguing!!. My best wishes to you @Iaksharahaasan and the whole #AMNP team!https://t.co/wdgpX4KAw3@kaiyavecha @TrendLoud @amnp_thefilm @trendmusicsouth @DoneChannel1 #AMNPTeaser #TrendloudOriginalFilm #AksharaHaasan
— shruti haasan (@shrutihaasan) September 24, 2020
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று இப்படத்தின் டீசரை கமலின் மூத்தமகளும் அக்ஷரா ஹாசனின் சகோதரியுமான ஸ்ருதிஹாசன் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.