#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெறும் 50 நாளில் 16 கிலோ எடை குறைத்த நடிகை ஆல்யா மானசா... ரகசியம் என்ன.? வைரலாகும் பதிவு!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி என்ற சீரியலில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.
இவர்கள் இருவரும் சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த நிலையில் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி இருந்தார் ஆல்யா.
இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். இது குறித்து நடிகை ஆல்யா கூறியதாவது, நம்மால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சூடு தண்ணீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மேலும் கடுமையான உடற்பயிற்சி, ரன்னிங், சூடு தண்ணீரில் சீரகம் கொதிக்க வைத்து குடிப்பது போன்ற செயல்களை தினமும் செய்யும் போது உடல் எடை கண்டிப்பாக குறையும் என ஆல்யா மானசா குறிப்பிட்டுள்ளார்.