#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதை சற்றும் எதிர்பார்கல... ஆல்யா மானசாவின் ரீஎன்ட்ரி குஷியில் ரசிகர்கள்... வைரலாகும் பதிவு!!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். ராஜா ராணி சீரியலில் நடிக்கும் பொழுது தன்னுடன் நடித்த சஞ்சீவை திருமணம் செய்து செட்டிலானார்.
இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து பிறகு உடல் எடை கூடி சிறிது காலம் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த ஆல்யா மீண்டும் தனது உடல் எடையை குறைத்து ராஜா ராணி சீசன் 2 வில் நடித்து வந்தார். ராஜா ராணி 2 வில் நடித்து கொண்டிருக்கும் போதே மீண்டும் கர்ப்பமான ஆல்யாவுக்கு சமீபத்தில் தான் அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா வெளியிட்ட வீடியோவில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் உடல் எடை கூடியுள்ளேன். மீண்டும் சீரியலில் நடிக்க உடல் எடையை குறைக்க வேண்டும். எனவே சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்கவுள்ளேன் என்று கூறி உள்ளார். ஆல்யாவின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆல்யா மானசாவின் இந்த ரீஎன்ட்ரியால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.