#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அலெக்ஸ் பாண்டியன் பட சந்தானத்தின் தங்கை இந்த பிரபல சீரியலின் நடிகையா! யார் தெரியுமா?
நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி, சந்தானம், அனுஷ்கா ஆகியோர் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்தில் நடிகர் சந்தானம் மற்றும் லொள்ளுசபா மனோகர் சேர்ந்து செய்யும் நகைச்சுவை ரசிக்கும்படியாக இருக்கும். மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானத்துக்கு தங்கையாக மூன்று பெண்கள் நடித்திருப்பார்கள்.
அவர்கள் மூவரும் நடிகர் கார்த்தியை காதலிப்பது போன்று நகைச்சுவையாக காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவர்கள் மூவருமே பார்ப்பதற்கு மிகவும் அழகாக ஹீரோயின் போன்றுதான் காட்சியளிப்பார்கள். இந்நிலையில் அந்த மூன்று பெண்களில் ஒருவர் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றின் சீரியலில் நடித்து வருகிறார்.
அவர் வேறு யாரும் இல்லை. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விநாயகர் சீரியலில் பார்வதியாக நடிக்கும் அகன்ஷா பூரி தான். அலெக்ஸ் பாண்டியன் படத்தில் இவர் நடிகர் சந்தானத்துக்கு இரண்டாவது தங்கையாக நடித்திருப்பார்.