#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"சம்பளம் வந்தால் போதும்! எப்படியும் நடிப்பேன்" லஸ்ட் ஸ்டோரீசில் நடிக்கவிருக்கும் அமலா பால்.!
ஹிந்தியில் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோகர் என நான்கு இயக்குனர்கள் இயக்கிய நான்கு குறும்படங்களின் தொகுப்பான "லஸ்ட் ஸ்டோரீஸ்" நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இதில் கரண் ஜோகர் இயக்கிய குறும்படத்தில் கியாரா அத்வானி நடித்திருந்தார்.
அதில் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யமுடியாத கணவராக விக்கி கௌஷல் நடித்திருந்தார். எனவே கியாரா வைப்ரேட்டர் கருவியை பயன்படுத்தி சுய இன்பம் அனுபவிக்கும்போது, அதை அவரது குடும்பத்தினர் பார்த்துவிடுவார்கள். இக்காட்சி இணையத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
தொடர்ந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது தமிழில் உருவாக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் கதையில் கியாரா அத்வானி நடித்த ரோலில் அமலா பால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பெயரை கெடுத்துக்கொண்டதால், இப்படத்தில் நடிக்கவேண்டாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் சம்பளம் வந்தால் போதும் என்று அமலா பால் இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை