#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் போக தயார்., ஆனா நான் செய்றததான் அவங்க ரெக்கார்ட் பண்ணனும் - கண்டிஷன் போட்ட நடிகை அமலாபால்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அமலாபால். இவர் சமீபகாலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவரது முன்னாள் காதலரான பவிந்திர் சிங் பாலியல் தொல்லை அளித்ததாகவும், நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை கொண்டு மிரட்டுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அமலாபாலுக்கும், தனக்கும் முன்பே திருமணம் நடைபெற்றதாக ஆதாரங்களை சமர்ப்பித்து அவர் ஜாமீன் பெற்றார். இந்த நிலையில், அமலாபால் சமீபத்தில் அளித்த பேட்டியில் 'தான் பொன்னியின் செல்வன் படவாய்ப்பை நிராகரித்து விட்டதாகவும், அதற்காக வருத்தப்படவில்லை' என்றும் கூறினார்.
மேலும் அமலாபாலிடம் பிக்பாஸ் செல்வீர்களா? என்று கேள்வி கேட்டதற்கும் பதில் அளித்துள்ளார். "நான் செல்ல மாட்டேன். அவர்கள் காட்டில் அல்லது இமயமலையில் இந்த ஷோவை நடத்தியிருந்தால், கண்டிப்பாக நான் செல்ல தயார். ஏனெனில் அங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த ரூல்ஸ், கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. நான் என்ன செய்கிறேனோ அதனை அவர்கள் ரெக்கார்ட் செய்து கொள்ளட்டும் என்று அமலாபால் தெரிவித்துள்ளார்.