#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ஆண் நண்பர்களுடன் மது அருந்தி மஜா செய்யும் அமலா பால்!" புகைப்படங்கள் வைரல்!
2010ம் ஆண்டு "சிந்து சமவெளி" படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
முதல் படத்திலேயே எதிர்மறை விமர்சனங்களை பெற்றவர் அமலா பால். இதையடுத்து பிரபு சாலமன் இயக்கிய "மைனா" இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இன்றுவரை இவரது சினிமா கேரியரில் மைனா திரைப்படம் ஒரு மைல்கல்லாக உள்ளது என்றால் மிகையாகாது.
இந்நிலையில் இயக்குனர் ஏ. எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். அதன் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திய அமலா பாலுக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் வரவில்லை.
எனவே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளிட்டு வரும் அமலா பால், தற்போது தனது ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.