பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சொட்ட.. சொட்ட.. மழையில் நனைந்து கிஸ்.! அமலா பால் ஹாட் பிக்.!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அமலா பால். இவர் 2009 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த நீலதம்ரா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இவர். மைனா படத்தில் இவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக பாராட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா, விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள், அதர்வா நடிப்பில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இவர் நடித்த ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகை அமலா பால் இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின் பொழுது போக்கிற்காக அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க ஆரம்பித்தார்.
பயணங்களை அதிகம் விரும்பும் இவர் அடிக்கடி சுற்றுலா சென்று அங்கே எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக பகிர்ந்து வருவார். தற்போது சுற்றுலா சென்றுள்ள இவர் மழையில் நனைந்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படம் பதிவிட்ட 30 நிமிடங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குளை பெற்று வைரலாகி வருகிறது.