"ஹீரோயின்ஸ அதுக்காக மட்டும்தான் யூஸ் பண்றாங்க" - தெலுங்கு சினிமாவில் நடிக்காததற்கான காரணத்தை போட்டுடைத்த நடிகை அமலாபால்..!! 



Amalapaul angry speech about tollywood cinema

தமிழ் திரையுலகில் பிரபலமான மற்றும் பிசியான நடிகை இருப்பவர் நடிகை அமலாபால். இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில், சமீபத்தில் இவர் நடித்த கடாவர் படம் கூட நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. 

இதனை தொடர்ந்து இவர் சர்ச்சையில் சிக்கிய செய்திகள் வந்ததால், தற்போதைய சர்ச்சையை நாயகி என்று நேட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. 

Actress amalapaul

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமலாபால் தெலுங்கு சினிமாவில் நடிக்காததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "தெலுங்கு திரையுலகில் குடும்பங்களின் கான்செப்ட் அதிகமாக இருக்கிறது. அவர்கள் எடுக்கும் திரைப்படங்களும் வித்தியாசமாக இருக்கும்.

எப்போதும் இரண்டு கதாநாயகி, காதல் காட்சி, பாடல் எல்லாமே கவர்ச்சியாக இருக்கும். அவை கமர்சியல் படங்களாக உள்ளன. மேலும், ஹீரோவை மையமாக கொண்டே படம் முழுவதும் இருக்கும். என்னை தெலுங்கில் ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் தெலுங்கு படத்தில் நடிக்க விருப்பமில்லை" என கூறினார்.