வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கேரள மக்களுக்காக கையில் கட்டுடன் களத்தில் இறங்கிய அமலாபால்: வைரலாகும் புகைப்படங்கள் .!
தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருக்கும் முன்னணி நடிகையான அமலா பால்,தற்போது 'அதோ அந்த பறவை போல' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கும்போது கையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பல்வேறு பிரபலங்கள் உணவு ,உடை என உதவி செய்து வருகின்றனர். மேலும் பல நடிகர்,நடிகைகள் நிவாரண நிதியை முதலமைச்சருக்கு அளித்து உதவி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை அமலா பால் கை அடிபட்டுள்ள நிலையிலும் மக்களுக்கு உதவுவதற்காக தானே நேரடியாக சென்று அவர்களுக்காக பல பொருட்களை வாங்கி வருகிறார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.