பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜய் டிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி முதன் முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், புது புது தொடர்கள் என மக்களை தன் பக்கம் இழுத்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல, விஜய் டீவியில் வரும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள். இன்று தமிழ் சினிமாவில் பிரபலமான இருக்கும் பலரையும் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்கள்தான்.
சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம் என பலர் உண்டு. அதில் ஒருவர்தான் DD என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் இவர் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்ற அளவிற்கு அணைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் DD .
சில வருடங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்துகொண்ட இவர், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து ஆனது. இந்நிலையில் இவர் தொகுப்பாளராக 20 வருடமாக இருந்து வருகின்றாராம், இதனால் தன்னுடைய ரசிகர்களுக்கு இவர் சமீபத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.
டிடி முதன் முதலில் வேலையில் சேர்ந்த போது 1000 ரூபாயை தான் சம்பளமாக அவர் வாங்கினாராம். ஆனால், தற்போது டிடி-யின் சம்பளம் சுமார் 5 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகின்றது.