#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டீவியில் கண்கலங்கிய பிரபல சன் டிவி தொகுப்பாளினி! இதுதான் காரணமா?
இந்திய அளவில் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சிதான். சன் தொலைக்காட்சியின் பிரமாண்ட வளர்ச்சிக்கு காரணம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே சீரியல் பார்த்த காலம் மாறி, இன்று சிறுவர்கள் முதல், இளைஞர்கள் வரை அனைவரும் டிவி சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் சன் தொலைகாட்சி நிறுவனத்தில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. சன் டிவி, சன் மியூசிக் என இரண்டு சேனல்களிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். டிவி நிகழ்ச்சிகள் போக, ஆடியோ லாஞ்ச், டி.வி, சினிமா நிகழ்ச்சிகளையும் பரவலாகத் தொகுத்து வழங்கிவந்தார்.
அந்தசமயம் நண்பர் உசைன் என்பவருடன் காதலில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்திற்கு மணிமேகலையின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கததால் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr and Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் உசைன் இருவரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய மணிமேகலை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டோம், தற்போது மிகவும் கஷ்டபடுகிறோம் என்றும், பெற்றோரை மிகவும் மிஸ் செய்துவதாகவும் கூறி மேடையில் கண்கலங்கியுள்ளார்.