#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடற்கரையில் காத்தோட்டமாய் புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா.?! கண் குளிரப்பார்க்கும் ரசிகர்கள்.!
கோலிவுட் திரையுலகில் பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்தவர் தான் ஆண்ட்ரியா. கௌதம் மேனன் இயக்கி சரத்குமார் ஜோதிகா நடித்து 2007 ஆம் வருடம் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம், திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம்,
மாஸ்டர், அரண்மனை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருபவர். திடீரென்று சினிமாவிற்கு பிரேக் விட்ட ஆண்ட்ரியா திரும்பி வந்து இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டு "மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடலாலும் மனதாலும் பாதித்தது" என அந்தப் பதிவில் கூறியிருந்தார்.
ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த இந்த கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ஆச்சர்யமடைந்து வருகின்றனர்.