#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஸ்வாசம் அஜித்தின் மகளா இது! செம மாடர்னாக வெளிவந்த புகைப்படத்தால் திணறிப்போன ரசிகர்கள்!!
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.
இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது.
மேலும் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெற்றும் வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து வெற்றி அடைந்தது.
இந்நிலையில் தற்போது அனிகா ஃபேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் செய்துள்ளார். மேலும் விருதும் வென்றுள்ளார். இந்த புகைப்படத்தை அனிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
— Anikha Surendran (@Anikhaofficial_) 29 April 2019