#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த சீருடை அணிந்து தரக்குறைவாக பேசிய பிரபல நடிகர்! கிளம்பிய எதிர்ப்பு! மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அனில் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏகே வெர்சஸ் ஏகே. இத்திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் அனில் கபூர் இந்திய விமானப் படையின் சீருடையை தவறான முறையில் அணிந்து சில தகாத வார்த்தைகள் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனை இந்திய விமானப்படை கண்டித்து அந்த காட்சிகளை நீக்கும்படி வலியுறுத்தியது.
இந்த நிலையில் நடிகர் அனில் கபூர் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது திரைப்படத்தின் சில காட்சிகள் ஒரு சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக அறிந்தேன். இதற்காக நான் வருத்தப்பட்டேன். எந்த ஒரு உள்நோக்கத்துடனும் அப்படியொரு காட்சியை வைக்கவில்லை.
@IAF_MCC pic.twitter.com/rGjZcD9bCT
— Anil Kapoor (@AnilKapoor) December 9, 2020
ஒரு விமானப்படை அதிகாரி தனது மகள் கடத்தப்பட்டதை அறிந்ததும் ஒரு சராசரி தந்தையின் கோபத்தை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது போன்றே காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது எவருடைய உணர்வுகளை புண்படுத்தி இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.