"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அனிருத் குரலில் வெளியாகும் நாட்டுப்புற பாடல்; கனா படக்குழு மகிழ்ச்சி
அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 'கனா'. சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு திபுநினன் தாமஸ் இசையமைத்து ஒரு புதிய பரிமாணத்தில் நாட்டுப்புற பாடலை உருவாக்கியிருக்கிறார். அந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் திபுநினன் தாமஸ் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது, ‘அனிருத்தின் ஸ்டுடியோவில் ஒரு நள்ளிரவில் முறையான அமைப்பு இல்லாமல் அந்த பாடலை பதிவு செய்தோம். அவருடன் வேலை செய்வது அவ்வளவு எளிதானது. அந்த பாடல் பதிவின் முழு அமர்விலும் எங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றியது, அதுவே பாடல்கள் மிகச்சிறப்பாக வரவும் உதவியது. நாங்கள் நாட்டுப்புற வகையில் புதிய பாணியில் ஏதாவது ஒன்றை உருவாக்க முயற்சித்தோம். வழக்கமாக, பியானோ மற்றும் ஸ்ட்ரிங்க்ஸ் போன்ற கருவிகள் மெல்லிய ரொமாண்டிக் பாடல்களில் தான் அதிகம் உபயோகப்படுத்தப்படும். ஆனால் நாங்கள் அதை பாரம்பரியமான தவில் மற்றும் நாதஸ்வரத்துடன் கலந்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறோம்’ என்றார்.
மேலும், அனிருத் பல விதமான பாடல்களை பாடியிருந்தாலும் இது அவரது லிஸ்டில் புதியதாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். இந்த அழகான நாட்டுப்புற பாடல் வரிகளை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அவரே இசையை வெளியிட இருக்கிறார். மேலும் இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர்கள் அனிருத், டி.இமான் ஆகியோரும் வெளியிடுகிறார்கள்.