பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திடீரென வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி! ஒத்தவரியில் அனிதாவின் கணவர் கூறியுள்ளதை பார்த்தீர்களா!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 61 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் வார இறுதியான நேற்று ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய 7 பேரும் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் சனம் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சனம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் பேசக்கூடியவர். இதனால் அவர் சிலரது எதிர்ப்பை பெற்றாலும், பல சமயங்களில் பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது. இந்நிலையில் சனம் வெளியேறியதால் கதறி கதறி அழுத அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இது நியாயம் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.