#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட யாருப்பா இது! குழந்தையுடன் அனிதா வெளியிட்ட புகைப்படம்!! செம ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியவர் அனிதா. இவர் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், மேலும் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். கடுமையான போட்டியாளராக இருந்த அனிதா அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்துஇறுதிவரை செல்வார் என எதிர்பார்த்த நிலையில் எதற்கெடுத்தாலும் அழுவது, போட்டியாளர்களுடன் சண்டை போடுவது என ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.
அதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். மேலும் அவர் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அனிதாவின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் மிகவும் நொறுங்கி போன அவர் எப்பொழுதும் அமைதியாகவும், மகிழ்ச்சியை இழந்தும் காணப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் அர்ச்சனாவின் சகோதரி வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டார்.பின்னர் இன்று அனிதா அவரது குடும்ப விழாவிற்கு சென்றுள்ளார்.
அதாவது அனிதாவின் கணவர் பிரபாவின் அக்கா குழந்தைக்கு மொட்டை அடிக்கும் விழா நடைபெற்றுள்ளது. அதில் தாய் மாமாவான பிரபா மற்றும் அனிதா இருவரும் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனிதா இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் குழந்தையுடன் அனிதா பதிவிட்ட புகைப்படம் அதிர்ச்சியில் ரசிகர்கள் என யூட்யூப்பில் போடுவார்கள் எனவும் கிண்டலாக தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.