#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆகா! அனுஷ்கா இப்படித்தான் தனது உடல் எடையை குறைத்தாரா? வெளிவந்த ரகசியம்!!
தான் நடித்த அருந்ததி திரைப்படம் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் முதன்முதலில் நடிகர் மாதவன் உடன் இணைந்து ரெண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அத்திரைப்படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பை அனுஷ்காவிற்கு தரவில்லை.அதனால் மீண்டும் தெலுங்கிற்கே சென்ற அனுஷ்கா வரிசையாக ஹிட் கொடுத்தார்.
பின்னர் அனுஷ்கா மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தில் தோன்றி ரசிகர்கர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தார்.மேலும் இவர் நடித்த அருந்ததி, பாகுபலி ,பாகமதி போன்ற படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது.
இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினார். ஆனால் அதன்பின் அவர் யோகா , ஒர்க்அவுட்,உணவு கட்டுப்பாடு என பலவற்றை பின்பற்றினாலும் உடல் எடை குறையாமல் அவதிப்பட்டு வந்தார்.பின்னர் பல முயற்ச்சிக்கு பின் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்தார்.
இந்நிலையில் அனுஷ்கா தான் உடல் எடையை குறைக்க தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில் 'என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கை முறையில் எற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நமக்கு இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உள்ளன . தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். அது தொடர்பான தகவல்களை இந்தப் புத்தகம் உங்களுக்கு வழங்கும் என பதிவிட்டுள்ளார்.