பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ப்பா.. கணவரையே மிஞ்சிடுவார் போல! வெறித்தனமான பயிற்சியில் அனுஷ்கா சர்மா! வைரலாகும் மாஸ் வீடியோ!!
பாலிவுட் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷர்மா. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகனான விராட் கோலியை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த அவர், குழந்தை பிறந்ததற்கு பிறகு அதற்கு இடைவெளிவிட்டிருந்தார். இந்நிலையில் அனுஷ்கா சர்மா தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருது பெற்ற ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்திற்காக அவர் தீவிரமாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா மைதானத்தில் மும்முரமாக, வெறித்தனமாக பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.