பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஊரடங்கு எங்களுக்குக் கிடைத்த வரமாக தெரிந்தது.! ஓப்பனாக பேசிய விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா.!
பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விராட் கோலிக் - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இந்தநிலையில், அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
தற்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தநிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், தனது மனைவின் பிரசவ காலத்தில் அவருடன் கூட இருப்பதற்காக விராட் கோலி மீதமுள்ள மூன்று டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளாமல் இந்தியா திரும்பினார். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா பிரபல நாளிதழான வோக் நாளிதழின் அட்டைப் படத்துக்கு நிறைமாத கர்ப்பிணி வயிற்றோடு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த நேர்காணலில் அனுஷ்கா கூறும்போது, “ நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்ததால் நான் கர்பமடைந்த செய்தி யாருக்கும் தெரியாது. கணவர் விராட் மட்டும்தான் என்னுடன் இருந்தார். அந்த சமயத்தில் ஊரடங்கு எங்களுக்குக் கிடைத்த வரமாக தெரிந்தது. ஏனெனில் விராட் என்னுடனே இருந்து என்னை கவனித்துகொண்டார். நாங்கள் மருத்துவரை காண்பதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே சென்றோம். நாங்கள் செல்லும்போது அந்த தெருவில் யாரும் இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.