#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏ.ஆர் ரஹ்மானின் மகளிற்கு வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவரின் இசையால் ரசிகர்களை கவர்ந்து இசை புயல் ஏ ஆர் ரகுமான் என்று ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.
ஏ ஆர் ரகுமான் உலக ஆஸ்கார் அரங்கில் இரண்டு விருதுகளை பெற்றிருக்கிறார். 'ரோஜா' திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ ஆர் ரகுமான் உலக அரங்கில் தமிழ் சினிமாவிற்கு பெருமையை பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ ஆர் ரகுமான் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற பலமொழிகளில் இசையமைத்திருக்கிறார். இவர் பல மேடைகளில் இந்தி மொழியை தவிர்த்து தமிழ் மொழியில் மட்டும் தான் பேசுவேன் என்பது குறிப்பிட்டு தமிழ் மொழிக்கு மென்மேலும் பெருமை சேர்த்து வருகிறார்.
இது போன்ற நிலையில், தற்போது ஏ ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் 'சில்லு கருப்பட்டி' பட இயக்குனரின் அடுத்த படமான 'மின்மினி' திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். ஏ ஆர் ரகுமானை போல் அவரது மகளும் மிகப்பெரும் இசையமைப்பாளராக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.