#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இப்படி பண்ணுவாருன்னு எதிர்பார்க்கல.. நெட்டிசன்கள் வருத்தம்.?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என உலக அளவில் பிரபலம் அடைந்தவராக இருக்கிறார். உலக அளவில் ஆஸ்கார் அவார்டு வென்று தமிழுக்கு பெருமை சேர்த்தவர் ஏ ஆர் ரகுமான்.
தமிழ் சினிமாவில் 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாகியது. இவரது இசையை ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி தேசிய விருது பெற்றிருக்கிறார்.
தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுள்ள ஏ.ஆர் ரகுமான் அடிக்கடி மேடைகளில் இந்தி பேச மாட்டேன் என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகும். சமீபத்தில் இவரது மனைவியை மேடையில் தமிழில் பேச சொன்னது தமிழ் மக்களிடையே பெருமையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற நிலையில் சர்ச்சைக்குரிய திரைப்படமான 'தி கேரளா ஸ்டோரீ' படத்தின் இயக்குனரின் அடுத்த படம் 'சகா ஸ்ரீ'.இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தி கேரளா ஸ்டோரீ திரைப்படத்தை இயக்கியவரின் அடுத்த திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதை குறித்து விரைவில் ஏ ஆர் ரகுமான் கருத்து தெரிவிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.