இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் அக்கா இந்த தொழில் செய்கிறாரா?? வெளிவந்த பின்னணி! வியப்பில் ரசிகர்கள்!



ar-rahman-sister-doing-organic-farming

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும், முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி பிரபலமாக கொடிகட்டி பறப்பவர் ஏ.ஆர். ரஹ்மான். அவரது அக்கா பெயர் ஏ ஆர் ரெய்ஹானா. இவரது மகன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி 
நடிகராக, இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ். 

இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் எனக்கு சிறு வயதிலிருந்து தோட்டக்கலையில் அதிக ஆர்வம் உள்ளது. எனக்கு உடம்பு சரியில்லாத போது மருத்துவர்கள் ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்ள கூறினர். அதனால் நான் ஆர்கானிக் உணவுகளை தேட துவங்கினேன்.

AR Rahman

அதன் பிறகு தனியாக நிலத்தை வாங்கி ஆர்கானிக் உணவு தோட்டத்தை உருவாக்கினேன். எனது தோட்டத்தில் செயற்கை உரங்கள் எதுவும் போடுவதில்லை. ஆட்டு உரம்,மாட்டு உரம் என இயற்கை உரங்கள்தான் பயன்படுத்துகிறோம். மேலும் மழைநீர்தான் பாய்ச்சுகிறோம் எனக் கூறியுள்ளார்.