#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அவர்களுக்கு பயமா? சின்மயி மற்றும் அவரது அம்மாவின் ரகளைகளை அம்பலப்படுத்திய ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி , அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சமீபகாலமாக நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து பாலியல் குற்றசாட்டு வைத்து பெரும் சர்ச்சையை கிளப்பியவர் பாடகி சின்மயி.மேலும் அவரை தொடர்ந்து பலரும் அவர் மீது பாலியல் புகார் அளித்து வருகின்றனர்.
மேலும் அதனை அப்பொழுதே கூறியிருக்கலாமே அதை ஏன் 15 வருடம் கழித்து இப்பொழுது கூறி சர்ச்சையை கிளப்பவேண்டும் என பலர் கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அப்போது எனக்கு பயம், அவ்வளவு தைரியமில்லை என்றும், தனி பெண்ணாக இருந்து நான் என்ன செய்ய முடியும் என்றும் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹானா கூறியதாவது, வைரமுத்து மிகவும் உயர்ந்த மனிதர். அவரை பற்றி நான் என்ன கூறமுடியும். அவரை பற்றி 3 பாடகிகள் என்னிடம் புகார் கூறியுள்ளனர்.ஆனால் எனக்கு உண்மை என்ன என தெரியவில்லை.
மேலும் ஒரு ஆண் தவறாக நடந்து கொண்டால் அந்த இடத்திலேயே பெண் பதிலடி கொடுக்க வேண்டும். 15 வருடங்கள் கழித்து வைரமுத்து பற்றி சின்மயி பேசியிருக்கிறார். கேட்டால் தைரியமில்லை பயம் என்கிறார்.
ஆனால், ஒரு முறை இசை கச்சேரி நடத்திய போது சின்மயி அம்மா போன் செய்து, என் மகள் பெயரை போட்டு தானே இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டினாய் என என்னிடம் கடுமையாக பேசினார்.
மேலும் மும்பை விமான நிலையத்தில் சின்மயியை ஒருவர் ‘மதராஸி’ என அழைத்துவிட்டார். அப்பொழுது சின்மயியும், அவரது தாயாரும் அந்த இடத்தையே ரணகளம் செய்து விட்டனர். எனவே, அவர்கள் யாருக்கும் பயப்படும் ஆட்கள் கிடையாது. எனவே, சின்மயி கூறுவதை ஏற்க முடியாது” என ரைஹானா தெரிவித்துள்ளார்.