#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நிஷாவிற்கே இப்படியொரு பரிதாப நிலையா? எல்லாத்துக்கும் அதுதான் காரணம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி, புகழின் உச்சிக்கு சென்றவர் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. மேடையில் பிறரை கிண்டல் செய்து இவர் செய்யும் காமெடி, வசனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
இதனை தொடர்ந்து நிஷா சினிமாவிலும் களமிறங்கி சில படங்களில் காமெடியில் அசத்தியுள்ளார். பின்னர் அவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் நாளடைவில் அவர் ரியோ மற்றும் அர்ச்சனாவின் அன்பு கேங்கில் சேர்ந்துக் கொண்டு அவரது திறமையை சிறிதளவும் வெளிப்படுத்தவில்லை என ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்யத் துவங்கினர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் நிஷா ஏராளமான எதிர்மறையான கருத்துக்களை சந்தித்தார். அவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத் திறமையால் அனைவரையும் அசர வைத்து வருகிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பேசிய நிஷா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு மிகவும் நெருக்கமானவர்களே என்னை புறக்கணித்து வந்தனர். நான் ஒரு லூசு மாறி சுத்திட்டு இருந்தேன் . என்னைப்பத்தி ஏகப்பட்ட நெகடிவ்வான கிண்டல்கள் வந்தது என வருத்தத்துடன் கூறியுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.