பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பிரபல நடிகை - அப்படி என்னதான் நடந்தது!
தமிழில், அரவான், ஞானக்கிறுக்கன் ஆகிய படங்களில் நடித்தவர், மலையாள நடிகை அர்ச்சனா கவி. இவர் மலையாள காமெடியன் அபிஷ் மாத்யூ என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன் கொச்சி விமான நிலையத்துக்கு காரில் நேற்று வந்துகொண்டிருந்தார். அவர்கள் வந்த கார், கொச்சி மெட்ரோ பாலத்துக்கு கீழே வந்தபோது, அதன் மீது பாலத்தில் இருந்து பெயர்ந்து, காங்கிரீட் துண்டு விழுந்தது. இதனால் அந்த டிரைவர், வண்டியை ஓரமாக நிறுத்தினார். பின்னர் காரை பார்த்தவருக்கு அதிர்ச்சி. முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. டிரைவர் இருக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் கான்கிரீட் துண்டு வந்து விழுந்துள்ளது.
நடிகை அர்ச்சனா ரவி உட்பட அனைவரும் பின் இருக்கையில் அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனை தன் ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அர்ச்சனா கவி மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் போலீஸையும் டேக் செய்து டிரைவருக்கு இழப்பீடு வழங்க கோரியிருந்தார்.
We had a narrow (providential) escape. A concrete slab fell on our moving car while we were on the way to the airport. I would request @kochimetro and @KochiPolice to look into the matter and compensate the driver. Also see to it that such things don't happen in future. pic.twitter.com/knDdqC3bwN
— Archana Kavi (@archana_kavi) 5 June 2019
இதற்கு பதிலளித்துள்ள மெட்ரோ ரயில் நிறுவனம், அந்த டிரைவரை நேற்று மாலை தொடர்பு கொண்டோம். இது தொடர்பாக எங்கள் நிறுவனம் விசாரித்து வருகிறது. நடந்த சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.