#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு வருஷமாச்சு.. மருமகனின் மறைவால் வேதனையில் நடிகர் அர்ஜுன் வெளியிட்ட பதிவு! வைரலாகும் அரிய புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ஆக்ஷன் கிங்காக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் . இவரது சகோதரியின் மகன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் கன்னட சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக இருந்தவர். சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ். இவரும் நடிகை ஆவார்.
மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் அப்பொழுது மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் சிரஞ்சீவி ஓராண்டு நிறைவு பெற்றநிலையில், தனது மருமகனின் இழப்பால் வாடிய நடிகர் அர்ஜுன் அவருடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால் நான் உன்னை வாழ்நாள் முழுவதும் பிரிந்து வருந்துகிறேன் சிரு மகனே.. அந்த நிலையான சந்தோஷ புன்னகை நீ எங்கிருந்தாலும் மறையாது என நம்புகிறேன் என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.