பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா... மணப்பெண் யார் தெரியுமா.?
நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடன் சென்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் ஹீரோவாக, டாக்டர் பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் நடித்து வருகிறார்.
மேலும் இந்த தொடரில் கதாநாயகியாக, கண்ணம்மா ரோலில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலகிய நிலையில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு விரைவில் திருமணம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் நிச்சயதார்த்தம் சீக்ரெட்டாக முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர்.