#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது.! நம்ம அருவி பட நடிகை அதிதி பாலன் ஒரு வழக்கறிஞரா.. அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.?
கோலிவுட் திரையுலகில் அறிமுக நடிகையான அதிதி பாலன் முதன் முதலில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் 'அருவி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாகி அதிதி பாலனின் நடிப்பு பாராட்டப்பட்டது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட நிகழ்ச்சியில் அருவி திரைப்படம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு பிறகு பல பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சினிமா துறையில் இருந்து அதிதி பாலன் சிறிது பிரேக் எடுத்துக்கொண்டார். அது குறித்து ஆங்கில இணையதள தொகுப்பாளர் ஒருவர் அவரிடம் கேட்டபோது 'அருவி' படத்திற்குப் பிறகு வந்த அனைத்து கதைகளும் பெண்ணுரிமையை மையப்படுத்தியே அமைந்தது. ஒரே விதமாக நடிக்க வேண்டாம் என்பதற்காக சிறிது காலம் இடைவேளை எடுத்துக் கொண்டேன் என்று கூறினார்.
தற்போது தங்கர்பச்சான் இயக்கத்தில் 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு ஆகியவர்களுடன் நடித்து வருகின்றேன். இப்படத்தின் மூலம் நல்ல அனுபவங்களை பெற்றுள்ளேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும், நான் வழக்கறிஞர் என்பதால் என்னிடம் பழகுவதற்கு சிலர் தயங்கி வருகின்றனர். ஆனால் நான் பழகுவதற்கு எளிமையான ஆள் தான். நீங்கள் என்னிடம் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசலாம் என்று சிரிப்புடன் ஆங்கில இணையதள பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.