#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் ஆர்யாவின் வருங்கால மாமனார், மாமியார் யார் தெரியுமா? புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. ஒருபக்கம் பிரபலமானாலும், மறுபக்கம் இவர் மீதான கிசுகிசுக்கள் அதிகரித்துக்கொண்டே போனது. முதலில் பூஜா, பின்னர் நஷ்ரியா, நயன்தாரா என இவர் மீதான கிசுகிசு வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போதுதான் இருவரும் காதலில் விழுந்ததாக கூறப்பட்டது.
இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளிவந்தாலும் நடிகர் ஆர்யா தரப்போ அல்லது சாயிஷா தரப்போ இதுகுறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இதுவம் வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்டது..
இந்நிலையில் காதல் தினமான இன்று தங்களது காதலையும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஆர்யாவும், சாயிஷாவும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். மேலும், வரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்தனர்.
நடிகை சாயிஷா தமிழில் வெளியான வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை சாயிஷா மும்பையை பூர்விகமாக கொண்டவர். இவரது தந்தை பெயர் Sumeet Saigal . இவர் ஒரு பிரபல நடிகர். பாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார் Sumeet Saigal . இவரது தாயார் பெயர் Shaheen Banu . இவரும் ஒரு பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.