ரொம்ப ரொம்ப நன்றி! செம்ம ஹேப்பியாக குக் வித் கோமாளி அஸ்வின் வெளியிட்ட வீடியோ! அப்படியென்ன விசேஷம் தெரியுமா??



aswin kutty pattas album song cross 50million views in social media

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, செம கியூட்டாக ரகளைகள் செய்து ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அஸ்வின் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்திருந்தார். மேலும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.  இதற்கிடையில் அஸ்வின், பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜானுடன் இணைந்து குட்டி பட்டாஸ் என்ற மியூசிக்கல் ஆல்பம் பாடலில் நடித்திருந்தார். 
வெங்கி இயக்கத்தில் உருவான இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருந்தார். மேலும் சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார்.

இந்நிலையில் அந்த ஆல்பம் பாடல் சமூக வலைதளங்களில் பெருமளவில் ட்ரெண்டானது. அதனை தொடர்ந்து தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில்  அஸ்வின் மிகவும் மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.