பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா! இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? செம மாஸ் தகவல்.
தளபதி விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கியுள்ளார் அட்லீ. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் உருவான தெறி, மெர்சல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிகில் படத்தை அடுத்து அட்லீ யாருடன் கூட்டணி சேரப்போகிறார், எந்த ஹீரோவை வைத்து இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ள நிலையில் அட்லீ அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாருகான் சென்னை வந்திருந்தபோது அட்லீ அவருடன் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைவதாக தற்போது பேசப்படுகிறது. இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் விரைவில் அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.