பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
14 நாட்களில் உலகளவில் அவதார் 2 படம் குவித்த வசூல்.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?.. தலையே சுத்திடும் போல..!
ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ல் உலகளவில் வெளியாகி அமெரிக்கா மதிப்பில் 292.2 கோடி டாலர் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் அவதார். இந்த படத்தின் 2ம் பாகம் உலகளவில் 160 மொழிகளில் கடந்த 16 டிசம்பர் அன்று வெளியானது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய வசூல் சாதனையை போல, 2ம் பாகமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது. தமிழ்நாட்டு விநியோகஸ்தர்களிடம் கூடுதல் தொகையை இந்திய வெளியீட்டு உரிமை நிறுவனம் கூறியதால், தமிழ்நாட்டில் பெருமளவு படம் வெளிஇயக்கவில்லை.
இந்த நிலையில், இப்படம் வெளியாகி 14 நாட்கள் ஆகின்றன. இந்த 14 நாட்களில் ரூ.8200 கோடி உலகளவில் வசூலை செய்துள்ளது என பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவதார் 2 திரைப்படம் டாம் குரூஸின் டாப் கண்: மேவரிக் படத்தின் சாதனையை முறியடிக்கும் என கூறப்படுகிறது.