பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஷிவானிக்கு மவுசு கூடுதோ! அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையபோவது இந்த சீரியல் நடிகரா? வெளிவந்த சூப்பர் தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 16 போட்டியாளர்களுடன் தொடங்கி நாளுக்கு நாள் வாக்குவாதங்கள், மோதல்கள், அன்பு, அக்கறை, காதல், பஞ்சாயத்து என எதற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது வாரத்தில் முதன்முறையாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் வேல்முருகன் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியில் புதிய போட்டியாளராக பாடகி சுசித்ரா கலந்துகொண்டுள்ளார்.
இவ்வாறு விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், புதிய வைல்ட் கார்டு எண்ட்ரியாக சீரியல் நடிகர் அசீம் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக ரொமான்ஸில் அசத்தினார். மேலும் அப்பொழுதே ஷிவானி மற்றும் அசீம் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்து பெரும் பரபரப்பு கிளம்பியது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்துள்ளனர்.