பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. சன் டிவி அழகு சீரியல் நடிகை ஸ்ருதியோட அம்மா இவர்தானா!! முதன்முதலாக தீயாய் பரவும் புகைப்படம்!!
தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். அவ்வாறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நடிகைகள் ஏராளம். மேலும் சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக அவர்களுக்கென ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இவ்வாறு சன் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் தமிழ்மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்ருதி ராஜ்.
இவர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அவர் இனி எல்லாம் சுகமே, காதல்.காம், செர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ஸ்ருதி சீரியலில் களமிறங்கினார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி அதனை தொடர்ந்து ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் மற்றும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அழகு தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் அவர் அண்மையில் முதல்முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.