"மூடுடா கேட்-ட" - பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தவாரம் நடக்கும் சிறப்பான சம்பவம் இதோ.. லிங்க் உள்ளே.!



Baakyalatsumi Promo Serial 7 July 2023 

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில், பாக்கியலட்சுமி என்றும் தனிசிறப்பு பெற்றது. குடும்பத்தின் நிலையால் படிப்பை விட்டு திருமணம் செய்த பாக்யாவுடன் விரும்பும் இன்றி வாழ்ந்து வந்த கோபி, தனது முன்னாள் காதலி ராதிகாவை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். 

விவாகரத்து வழங்கி புதிய காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பக்குவத்திற்கு வந்த பாக்கியலட்சுமி, தனது குடும்பத்தை ஒற்றை ஆளாக தாங்கி வருகிறார். ராதிகா-கோபி சேர்ந்து பாக்யலட்சுமிக்கு பல முட்டுக்கட்டைகளை போட, சோதனைகளை சாதனையாக்கி வெற்றி அடைந்து வருகிறார். 

Baakyalatsumi

கடந்த வாரத்தில் கோபி வீட்டிற்கு ரூ.18 இலட்சம் மீதமுள்ள பணம் வேண்டும் என கேட்ட, ஒரு மாதத்தில் அதனை திருப்பி தருகிறேன் என பாக்யலட்சுமியும் சவால் விடுத்தார். அவரின் சவாலை நிறைவு செய்ய பழனிச்சாமியின் உதவியால் பணம் கிடைத்துவிட, அடுத்த வாரம் என்ன மாதிரியான பரபரப்புடன் காட்சிகள் நகரும் என பலரும் எதிர்பார்த்தனர். 

Baakyalatsumi

இந்த நிலையில், கோபி-ராதிகா கேட்ட பணத்தை கையில் கொடுத்துவிட்டு இருவரையும் பாக்கியலட்சுமி வெளியே அனுப்பி கதவை இழுத்து பூட்டுங்கடா என்ற மாஸ் வசனத்துடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இனி அடுத்த வாரம் பாக்யலட்சுமி தொடர் விரும்பிகளுக்கு பட்டாசுகளை வெடிக்கவைக்கும் நேரமாக அமைந்துள்ளது.

Photo & Video Thanks: Vijay Television YouTube