#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே.. குக் வித் கோமாளி பாபா பாஸ்கருக்கு இப்படியொரு கஷ்டமா! என்ன நடந்துள்ளது பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அத்துடன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசனில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் ஆகியோர் கோமாளியாகவும், நடிகை ஷகிலா, அஸ்வின், பவித்ரா லட்சுமி, பாபா பாஸ்கர், கனி மற்றும் வைல்ட் கார்டு என்ட்ரியில் நடிகை ரித்திகா ஆகியோர் தற்போது போட்டியாளர்களாகவும் உள்ளனர். மேலும் இதில் கோமாளிகள் செய்யும் ரகளைகள் அனைத்தும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளைப் போலவே சேட்டைகள் செய்து மிகவும் உற்சாகத்துடன் போட்டியிட்டு வருபவர் பாபா பாஸ்கர். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
இந்த நிலையில் பாபா பாஸ்கர் மிகவும் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கே தெரியாமல் யாரோ ஒருவர் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்துவிட்டனர். ரசிகர்கள் போடும் கமெண்ட் மூலமாகத்தான் நான் என்னுடைய நிறை குறைகளை தெரிந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தேன். அது பிடிக்காத ஒருவன் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்துவிட்டான். இருந்தாலும் விரைவில் திரும்பி வருவேன் என்று பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.