#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் மகள் வசனத்தை பேசிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவருக்குமே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய் அல்லது அஜித் படம் வெளியாக போகிறது என்றால் சமூக வலைத்தளங்கள் பயங்கர பிஸியாகிவிடும். தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்து விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார் தல அஜித்.
விஸ்வாசம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெறி, மெர்சல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் தளபதி 63 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தவர் பேபி அனிகா. விஸ்வாசம் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. தற்போது விஜய் நடித்த தெறி படத்தில் பேபி நைனிகா பேசிய வசனத்தை டப்மாஷ் செய்து வெளியிட்டுள்ளார் பேபி அனிகா. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Ma favourite one 😘 #theri #vijay uncle 😋 pic.twitter.com/tZ1UbxyKEH
— Anikha Surendran (@anikasurendran_) January 13, 2019