#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விதவிதமான கெட்டப்பில் பெண்களை விரட்டி வேட்டையாடும் சைக்கோவாக பிரபுதேவா!! மிரளவைக்கும் பஹீரா டீசர்!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா மிரட்டலான சைக்கோவாக நடித்துள்ள பஹீரா படத்தின் மிரட்டலான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பஹீரா. இதில் தேவி படத்திற்கு பிறகு முன்னணி நடிகரும், பிரபல நடன இயக்குனருமான பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார்.
இப்படத்தில் பிரபுதேவா வித்தியாசமான, விதவிதமான கெட்டப்புகளில், பெண்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் சைக்கோவாக நடித்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு பிரபுதேவா இப்படத்தில் செம மிரட்டலாக நடித்துள்ளார். இந்நிலையில் பஹீரா படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இப்படத்தில் அமைரா தஸ்துர், சோனியா அகர்வால், சாக்ஷி அகர்வால் ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு கணேஷ் சேகர் இசையமைத்துள்ளார். மேலும் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த நிலையில் பஹீரா படத்தின் டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.