#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அய்யோ.. நம்ம பாக்கியலட்சுமி ஜெனிக்கு உண்மையிலேயே அடிபட்டுவிட்டதா?? என்னதான் நடந்தது.! வைரலாகும் ஷாக் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமிக்கு மருமகளாக நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டபட்டு அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் கடந்த வார எபிசோடுகளில் கர்ப்பமாக உள்ள ஜெனி திடீரென வழுக்கி விழுந்துவிடுவது போன்று காட்சிகள் ஒளிபரப்பானது. இதனை தொடர்ந்து அவரை ராதிகா மருத்துவமனைக்கு அழைத்து செல்வார். இந்நிலையில் கீழே விழும் காட்சி ஷூட்டிங் எடுத்தபோது அவருக்கு நிஜத்திலேயே காயம் ஏற்பட்டுள்ளது.
கீழே விழும்போது அவரது கையில் போட்டிருந்த வளையல் உடைந்து கையில் குத்தியுள்ளது. மேலும் இதனால் அவரது கையில் ரத்தம் கொட்டியுள்ளது. தொடர்ந்து அவருக்கு ஸ்பாட்டில் உள்ளவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இந்த வீடியோவை நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி ரசிகர்களை பதறவைத்துள்ளது.