பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குடும்ப குத்துவிளக்கு பாக்கியலட்சுமியா இது.. மாடர்ன் மகாலட்சுமியாக வெளிவந்த புகைப்படம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. குடும்பத்தில் ஒரு பெண் படும் கஷ்டத்தை மையமாக கொண்டு எடுக்கபட்டு வரும் சீரியல் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் இந்த சீரியலில் பாக்கியா கதாபாத்திரம் வெகுவாக மக்களை ஈர்த்துள்ளது. பாக்கியாவிற்கு விவாகரத்தானாலும் தன் சொந்த காலில் நின்று தன் குடும்பத்தை கவனித்து கொள்வது போல சீரியலில் கதை இருப்பதால் பெண் ரசிகர்கள் அதிகம் இந்த சீரியலுக்கு ரசிகையாகி இருக்கின்றனர்.
இதுபோன்ற நிலையில்,சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த சுஜித்ரா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு சமீபத்தில் சேலையில் மாடர்னாக பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து மாடர்ன் மகாலட்சுமி என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.