பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கோபிக்கும், ராதிகாவுக்கும் திருமணமா?.. பாக்யாவின் வீட்டில் வெடிக்கப்போகும் பூகம்பம்..! அடுத்தடுத்த மாஸ் டிவிஸ்ட்டுடன் பாக்யலட்சுமி ப்ரோமோ.!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்து சில வாரங்களாகவே மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இந்த நெடுந்தொடர் குடும்பகதையை பின்னணியாக கொண்டு ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இத்தொடரில் திருமணத்தை மீறிய உறவால் கோபிக்கு பாக்கியலட்சுமி விவாகரத்து தரவே, அவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் கோபி ஈடுபட்டு வந்தார். இதன்பின் கடந்த வாரமே ஒரு சவாலை முன்வைத்து கோபி வீட்டை விட்டு பெட்டியுடன் வெளியேறினார். அப்பொழுது கூட கூச்சமில்லாமல் மீண்டும் ராதிகாவை பார்த்து 'நீ இல்லை என்றால் அவ்வளவு தான்' என கூறி வந்தார்.
இந்த நிலையில் அடுத்த வார பாக்கியலட்சுமி ப்ரோமோவில், பாக்கியலட்சுமி இனியாவிற்காக கல்வி கட்டணம் செலுத்த சென்று கொண்டிருக்கும்போது நடுரோட்டில் ராதிகாவின் கையை பிடித்து இழுத்த கோபி, 'உன்னால் மட்டுமே நான் என் குடும்பத்தையே தூக்கி போட்டுவந்தேன். நீ இல்லை என்றால் என் வாழ்வே இல்லை. உனக்கும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறதல்லவா? என கேட்கிறார்.
அதற்கு ராதிகாவும் ஆமாம் என்று தலையாட்டி, எனக்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் எனக் கூறுகிறார். இதையெல்லாம் கேட்காத கோபி நடுரோட்டில், 'நான் செத்துப் போவது தவிர வேறு வழியே கிடையாது' என கோபத்துடன் கத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ராதிகா என்ன கூறுவார்? அடுத்ததாக பாக்யாவின் வீட்டில் என்ன நடக்கப்போகிறது? கோபிக்கும், ராதிகாவுக்கும் திருமணம் நடக்குமா? என்பதுடன் முடிவடைகிறது.