#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எம்ஜிஆராக நடித்துள்ள பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்! அட.. எப்படியிருக்காரு பார்த்தீர்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. குடும்பத்தை, கணவரை கவனித்து கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை தேடும் சாதாரண குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த மனைவியின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், எதற்கெடுத்தாலும் குறைகூறி எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருக்கும் சிடுமூஞ்சி கணவராகவும், தனது முன்னாள் காதலியோடு தொடர்பு வைத்திருக்கும் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதிஷ். இவ்வாறு நடிப்பதற்கு ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் அவர் இதெல்லாம் நடிப்பு. அது சீரியல். இதற்காக என்னை திட்டுவதெல்லாம் நியாயமா என பாவமாக கேட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சதிஷ், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் போலவே வேடமிட்டு படம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.