மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாக்கியலட்சுமி ஹீரோவா இது.? வைரலாகும் பழைய புகைப்படம்.!
பெரும்பாலும் திரைப்படங்களைவிட சின்னத்திரையில் வரும் மெஹா சீரியல்களே குடும்ப மக்களிடம் பெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இதில் வரும் கோபி என்ற கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் குமார் நடித்து வருகிறார். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நிறைய சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கோபி கதாபாத்திரத்தை நடித்தார் என்பதை விட வாழ்ந்தார் என்றே சொல்லலாம் அவ்வளவு அற்புதமாகவும் தத்ரூபமாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் இவரது முன்னாள் மனைவியாக சுஜித்ரா என்ற கன்னட நடிகையும், மனைவியாக ரேஷ்மா பசுபெல்தியும், மகனாக விஜே விஷாலும் நடித்து வருகின்றனர்.
விஜே விஷாலுக்கு ஜோடியாக இதில் ரித்திகா நடித்துள்ளார். இவர்கள் இருவருமே குக் வித் கோமாளி ஷோ மூலம் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எழில் என்ற கதாபாத்திரத்தில் விஷாலும், அம்ரிதா என்ற கதாபாத்திரத்தில் ரித்திகாவும் நடித்து வருகின்றனர். இதில் அம்ரிதா கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழ்க்கை நடத்தி வருவார். எழில் அவரை காதலித்து பல போராட்டங்களுக்கு பின் திருமணம் செய்துகொள்வார்.
ஆரம்பத்தில் கோபி கேரக்டர் டெர்ரராக காண்பிக்கப்பட்டு வந்தது. அப்போது அந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பை பெறவில்லை நாளடைவில் தனது முன்னால் இன்னால் மனைவிகளுக்கு மத்தியில் கோபி மாட்டிக்கொண்டு படும்பாடு ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது. கோபி சதீஷ் குமாரின் பழைய புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் குடுமி வைத்துக்கொண்டும் நெற்றியில் ராமத்தோடும் இருப்பார்.இதைப்பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம பாக்கியலட்சுமி கோபியா இது என ஆச்சர்யப்படுகிறார்கள்.