#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்! இனி இப்படிதான்..வைரலாகும் வீடியோ!
தற்காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்களாக உள்ளனர். அதுவும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களையே தவறாமல் அனைவரும் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. பொறுப்பான குடும்பத்தலைவி, அன்பான மனைவி, பாசம் நிறைந்த அம்மா, மரியாதையான மருமகள் என குடும்பத்தரசியாக இருக்கும் ஒரு பெண் சமாளிக்கும் பல சவால்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த தொடர் அமைந்துள்ளது.
இனிமே நம்ம பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision pic.twitter.com/mpwBMN3Rz3
— Vijay Television (@vijaytelevision) October 9, 2020
பாக்கியலட்சுமி தொடர் விஜய் தொலைக்காட்சியில் இதுவரை மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தற்போது நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அக்டோபர் 12 முதல் அதாவது வரும் திங்கள் முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதுகுறித்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.