என் வாழ்க்கையில இதுவே போதும்! ரசிகரின் ஒத்த மெஸேஜால் செம நெகிழ்ச்சியில் பாலா!



bala-happy-for-fan-message

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. இதில் ஆரி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் பாலா இரண்டாவது இடத்தைப் பெற்றார். பாலா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, எதற்கெடுத்தாலும் அனைவரிடமும் கோபப்பட்டு பெரும் எதிர்ப்பை பெற்றார். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவால் இறுதிவரை சென்றார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பாலாஜிக்கு யூடியூப், விஜய் டிவி உள்ளிட்ட அனைத்தும் உங்களை ஒரு மோசமான நபர் என காட்ட முயற்சி செய்தனர். எல்லோருக்கும் சந்தோஷமான தருணங்கள் காட்டப்பட்டது. ஆனால் உங்களுக்கு மட்டும் மோசமான நிகழ்வுகளே காண்பிக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளீர்கள். எங்கள் அனைவரது உள்ளங்களையும் வென்று இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

balaji

அதற்கு பாலாஜி, நான் நல்லவன் என பெயர் வாங்குவதற்காக உள்ளே போகலை. பாலாவாகவே இருந்தால்  உங்களுக்கு பிடிக்குமா என பார்க்கத்தான் சென்றேன். ஆனால் எனக்கு கிடைச்சது ஆறுகோடி கோப்பை. நான் எனது மனதில் தோன்றியதையே வெளிப்படையாக பேசினேன். ஆனாலும் நீங்கள் என்னை விரும்பியுள்ளீர்கள். மேலும் நான் நல்ல மனிதனா? கெட்டவனா என்ற சந்தேகம் இருந்தது. தற்போது நான் நல்லவன்தான் என்ற விடை கிடைத்துள்ளது. என் வாழ்க்கை முழுவதும் இது ஒன்று போதும் என பதில் அளித்துள்ளார்.